இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ரத்து

0 8764

கொரானா எதிரொலி உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்ட இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பிந்தைய தேதிகளில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. வரும் 15-ஆம் தேதி லக்னோவிலும், 18-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்த 2 மற்றும் 3-வது போட்டிகளும் கொரானா பீதி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தப் போட்டித் தொடர் மறு அட்டவணைப்படுத்தப்பட இருப்பதாகவும், பின்னர் அறிவிக்கப்படவுள்ள தேதிகளில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments