பங்கு சந்தைகளில் பல ஆயிரம் கோடிகளை தொலைத்த பணக்காரர்கள் -Forbes

0 2515

பங்கு சந்தைகளில் பல ஆயிரம் கோடிகளை தொலைத்த பணக்காரர்கள் பட்டியல் குறித்து போர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வீழ்ச்சியால் பல முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ளனர். அந்த வகையில், பெரும் இழப்புகளை சந்தித்த பில்லியனர்கள் பற்றி போர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவர், நேற்றைய நிலவரப்படி, 1.8 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்துக்களை இழந்துள்ளார். இதனால் தற்போது ரிலையன்ஸ் பங்கு 40.2 பில்லியன் டாலராகவும் சொத்து மதிப்பு 8% வீழ்ச்சி அடைந்துள்ளது. அவென்யூ சூப்பார்மார்ட்ஸ் ராதாகிஷன் தமனியின் பங்குகள் 5% வீழ்ச்சி அடைந்து 828 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெச்சிஎல் நிறுவன தலைவர் ஷிவ் நாடாரின் பங்குகள் 1.1% பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்து சொத்து மதிப்பு 8.18% வீழ்ச்சியை கண்டுள்ளது.

image

கோட்டாக் மகிந்தரா வங்கியின் உதய் கோட்டாக் சொத்து மதிப்பிலிருந்து 12.7 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. பங்குகள் விலை 7.72% வீழ்ச்சியடைந்தது. ஏர்டெல் நிறுவன தலைவரின் சொத்து மதிப்பு 596 மில்லியன் குறைந்து 9.5 பில்லியன் டாலாராக உள்ளது.பாரதி ஏர்டெல் பங்கு 5.82% வீழ்ச்சி கண்டுள்ளது.  சன் பார்மா நிறுவன திலீப் சங்க்வி 693 மில்லியன் டாலர்களை இழந்து அவரின் சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலராக உள்ளது. ஆதித்யா குழுமத்தின் குமார் பிர்லாவின் சொத்து மதிப்பு 593 மில்லையன் டாலரை இழந்து 8.2 பில்லியன் டாலராக உள்ளது.மேலும், லட்சுமி மிட்டல், பெனு கோபால், நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட பலர் தனது சொத்து மதிப்பில் பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ளனர்.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments