NPR,CAA குறித்து எதிர்க்கட்சியினர் அச்சுறுத்துவதுபோல் எந்தக் காலத்திலும் நடக்கவே நடக்காது - முதலமைச்சர்

0 1731

என்பிஆர், சிஏஏ விவகாரத்தில் மக்கள் சிறைவைக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சியினர் அச்சுறுத்துவதுபோல் எந்தக் காலத்திலும் நடக்கவே நடக்காது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்த விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

அப்போது, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றால் ஏராளமானோர் சிறைவைக்கப்படுவார்கள் எனப் பொதுமக்களிடமும் சிறுபான்மையினரிடமும் எதிர்க்கட்சிகள் அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

என்பிஆர் விவகாரத்தில் அச்சத்தை தூண்டும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டதால் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments