நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவு: ஆளுநரிடம் முதலமைச்சர் கமல்நாத் கோரிக்கை கடிதம்
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சபாநாயகர் நிர்ணயிக்கும் தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும்படி, ஆளுநரிடம் முதலமைச்சர் கமல்நாத் கடிதம் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததையடுத்து, அவரது ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைத்தனர்.
அதன்மீது முடிவெடுக்கப்படாத நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கமல்நாத்துக்கு உத்தரவிட பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆளுநர் லால்ஜி தான்டனை (Lalji Tandon) சந்தித்த கமல்நாத், மாநிலத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியும், பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதம் அளித்தார்.
Comments