உன்னாவில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் தந்தை கொலை வழக்கில் 7 பேருக்கு 10 ஆண்டு சிறை

0 1037

உன்னாவில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் உள்ளிட்ட 7 பேருக்கு டெல்லி நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் செங்காருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் 25 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பான வழக்கிலும் குல்தீப் செங்கார், அவர் தம்பி அதுல் செங்கார், அவர்களின் அடியாட்கள் 3 பேர், பொய்வழக்குப் பதிந்த காவல்துறையைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 7பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் 7 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குல்தீப் செங்கார், அவர் தம்பி அதுல் செங்கார் ஆகியோர் ஆளுக்குப் பத்து லட்ச ரூபாயைப் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments