வனத்துறை, பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதலாக 210 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு - முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்புகளை, இன்று சட்டப்பேரவையில், 110 ஆவது விதியின் கீழ் வெளியிட்டுள்ளார்.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை மிக அருகில் காணும் வகையில் பதினொன்றரை கோடி ரூபாய் செலவில் விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுவதை தடுக்க தர்மபுரி, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் 60 கிலோ மீட்டர் நீளத்திற்கு 21 கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு கம்பி வேலி அமைக்கப்படும். என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய்செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும்.
அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 3 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பானஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா 35 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments