சிந்தியா பாஜகவில் சேர்ந்த 2 நாட்களில் அவர் மீது நில மோசடி வழக்கு

0 1958

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்த இரு தினங்களுக்குள்அவரது குடும்பத்தின் மீது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் நில மோசடி வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு தூசி தட்டி எடுத்துள்ளது.

கடந்த 2009 ல் ஸ்ரீவாத்ஸவா என்பவருக்கு சிந்தியா குடும்பத்தினர் மஹல்கோஹன் என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் சதுர அடி நிலத்தை விற்றனர்.

ஆனால் போலியான ஆவணத்தை கொடுத்து அதைவிடவும் சிறிதான இடத்தை தந்து விட்டதாக ஸ்ரீவாத்ஸவா வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு கடந்த 2018 ல் அது முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீவத்சவாவிடம் இருந்து புதிய புகார் ஒன்றை நேற்று பெற்ற மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணையைத் துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments