அமெரிக்காவில் 15 கோடி பேர் கொரானாவால் பாதிக்கப்படும் நிலை
அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொரானா வைரசால் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற அதிபரின் கொரானா தடுப்பு குழு கூட்டத்தில் பேசியபோது இந்த தகவலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரசிதா த்லாய்ப் அளித்தார்.
அப்போது அவர், 2 வகையிலான அடிப்படைகளை வைத்து அமெரிக்க நாடாளுமன்ற மருத்துவர் பிரையன் மோனஹன் இந்த மதிப்பீடுகளை அளித்திருப்பாதகவும், மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ரசிதா த்லாய்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். ரசிதா த்லாய்ப்பின் மதிப்பீடுகளை வைத்து பார்க்கையில் சுமார் 46 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட வாய்பிபிருப்பதாக கூறப்படுகிறது.
Comments