அமெரிக்க டாலர் ஏலம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக 200 கோடி அமெரிக்க டாலர்களை ஏல முறையில் கைம்மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில், மார்ச் 16ஆம் தேதி காலை ஒன்பதரை மணி முதல் 11 மணி வரை ஏலம் நடைபெறுவதாகவும், பதிவு பெற்ற முகவர்கள், வங்கிகள் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. குறைந்தது ஒரு கோடி அமெரிக்க டாலர் வீதம் அதன் மடங்குகளில் ஏலம் கேட்கலாம்.
இந்த ஏலத்தில் கேட்டுப்பெறும் டாலர்களை ஆறு மாதத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதிகப் பிரீமியம் தர ஒப்புக்கொள்பவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் கைம்மாற்றப்படும்.
மார்ச் 18ஆம் தேதி அமெரிக்க டாலர்களைப் பெறுவோர் செப்டம்பர் 18ஆம் தேதி அதே அளவு டாலர்களைத் திருப்பி ரிசர்வ் வங்கிக்குக் கொடுக்க வேண்டும்.
நிதிச்சந்தையும் நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படுவதற்காக நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் 48 ஆயிரத்து 724 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Comments