இந்தியாவில் ஆபரணங்கள், கற்கள் ஏற்றுமதி குறைவு!
விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்,மாணிக்கம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC INDIA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டில் விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில், 20,736.28 கோடியாக ஏற்றுமதியாகியுள்ளது.
இது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 26,039.32 கோடியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதியானது 20.26% குறைந்துள்ளது எனவும், கொரோனா வைரஸ் மற்றும் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக GJEPC INDIA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments