கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் வீட்டிலிருந்தே அலுவல் பணிகளை மேற்கொள்ள முடிவு !

0 2091

தனது மனைவி கொரோனா பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதால் தனது அலுவல் பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ முடிவுசெய்துள்ளார்.

ஜஸ்டின் ட்ருடோவின் மனைவியான சோபி க்ரிகோயிருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரும் வரை, அலுவல் பணிகளை
செல்போன் அழைப்புகள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வீட்டிலிருந்தே செய்ய ஜஸ்டின் ட்ருடோ முடிவெடுத்துள்ளார்.

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments