பெருநகரங்களில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்

0 1920

ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்துகளை இயக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய அவர், அவசரகால ஒலி எழுப்பும் வசதி, சிசிடிவி கேமரா ஆகிய வசதிகளுடன் பேருந்துகள் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டன என்றும்  இது பெண்கள் பாதுகாப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க உதவும் என்றும் கூறினார். 

இது தவிர ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில், முழுவதும் பெண்களுக்காக இயக்கப்படும்  பிங்க் நிற பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இதில் ஓட்டுநர், நடத்துனர்  பணியில் பெண்களே இருப்பார்கள் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments