செல்போன்களுக்கான GST வரி உயருகிறது ?
செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி வரியானது, 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.
இதனால், செல்போன்களின் விலை கணிசமாக உயரவுள்ளது. அதேபோல, ஜவுளிகள், உரங்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்டியும் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி கணக்கு தாக்கலை எளிமையாக்குவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
Comments