சிவராஜ் சிங் சவுகானுடன் ஜோதிராதித்யா சிந்தியா ஆலோசனை
மத்தியப் பிரதேசத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்றத்தில் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக கோரியுள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் விலகியதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது. பா.ஜ.க.வில் இணைந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், சிந்தியா உள்ளிட்டோர் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்றக் கொறடா மிஸ்ரா, ஆளுநரை சந்தித்து 16ம் தேதி பெரும்பான்மை நிரூபிக்க கமல்நாத் அரசுக்கு கெடுவிதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, கட்சித் தாவலைத் தடுக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments