NPR - க்கு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை - அமித்ஷா

0 4026

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். 

குடியரிமை சட்டத் திருத்தம் (CAA ), தேசிய மக்கள் தொகை பதிவேடு ( NPR) டெல்லி கலவரங்கள், உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளித்து புதன்கிழமை மக்களவையில் பேசிய அமித் ஷா நேற்று மாநிலங்களவையிலும் பேசினார். டெல்லி கலவரங்கள் பற்றி பேசிய அவர் கலவரத்தில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் விட மாட்டோம் என்று உறுதியளித்தார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் டி என்ற பிரிவு எதற்காக என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். டி என்பது டவுட்ஃபுல்( doubtful ) அல்லது சந்தேகத்திற்குரியவர் என்பதைக் குறிப்பதாகும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பினர். ஆவணங்களைத் தராதவர்கள் இப்பிரிவில் வைக்கப்படுவார்கள் என்ற சந்தேகத்தையும் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமித் ஷா, எந்த ஒரு இந்தியரும் தேசிய மக்கள் பதிவேட்டின் போது டி பிரிவில் வைக்கப்பட மாட்டார் என்று உறுதியளித்தார். மேலும் NPRக்கு எந்த ஒரு ஆவணமும் தரத் தேவையில்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். எதிர்க்கட்சியினர்தான் இப்படி ஒரு டி பிரிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் சாடினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர் .ஆவணம் தேவையில்லை என்றா கூறுகிறீர்கள் என்று காங்கிரஸ் எம்பியான கபில் சிபல் கேள்வி எழுப்ப ஆம். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதனை அறிவிப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா NPR - தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேசிய போதும், NCP தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து எதுவும் கூறவில்லை .ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் இதில் சேகரிக்கப்பட உள்ளன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. NPR தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது வெறுமனே பெயர்ப் பட்டியல் என்றும் NCP தேசிய குடிமக்கள் பதிவேடுதான் இந்திய மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.

டி பிரிவு - என்.ஆர்.சியில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அமித் ஷா ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதில் மதரீதியாக எந்த பிரிவினையும் இருக்காது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் 1997ம் ஆண்டு டி பிரிவு அறிமுகமானது . குடியுரிமையில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் டி பிரிவில் வைக்கப்பட்டனர் . இப்பிரிவில் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments