"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
விமான போக்குவரத்துத்துறை அதிக அழுத்தத்தில் உள்ளது
கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் விமான போக்குவரத்துத்துறை அதிக அழுத்தத்தில் உள்ளதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளர் அஜய்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் கொரானா அச்சுறுத்தலால் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அஜய் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதேபோன்ற நிலையை தாங்கள் முன்னதே எதிர்கொண்டு உள்ளதாகவும், தற்போதைய சூழல் தற்காலிகமானது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாகவும், அரசின் இந்த முயற்சியால் விமான போக்குவரத்துத்துறை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments