அரசு ஊழியர்களின் போன்களில், டிக்டாக் செயலிக்கு தடை?
ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள ஸ்மார்ட் போன்களில், டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா இன்று அமெரிக்க செனட்டில் தாக்கலானது.
டிக்டாக் செயலி மூலம் அமெரிக்கா குறித்த ரகசியங்களை சீனா திருடுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோஷ் ஹாவ்லி, (Josh Hawley) ரிக் ஸ்காட் (Rick Scott) ஆகிய குடியரசுக் கட்சியின் இரண்டு செனட்டர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்தனர்.
வெளியுறவு அமைச்சகம், உள்நாட்டுப் பாதுகாப்பு, உளவுத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் அரசு வழங்கும் செல்போன்களில் டிக்டாக்கை பயன்படுத்த தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
சீன நிறுவனமான டிக்டாக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய ஹாவ்லி, இந்த செயலியால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஹாவ்லியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டிக்டாக் நிர்வாகம் கூறியுள்ளது.
Comments