கச்சா எண்ணெய் விலை மேலும் சரிய வாய்ப்பு

0 1950

உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை நேற்று குறைந்தது.

கச்சா எண்ணைய் உற்பத்தி நாளொன்றுக்கு ஒரு கோடி 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் பேரல்களாக உயர்த்த சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அராம்கோ தலைவர் அமீன் நாசர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நியூ யார்க் மெர்கண்டைல் எக்சேஞ்சில் அமெரிக்க கச்சா எண்ணையின்விலை 32 புள்ளி 98 டாலராக குறைந்தது.

விலை வேகமாக சரிவதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என விடப்பட்ட கோரிக்கையை ஏற்க ரஷ்யா தலைமையிலான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு மறுத்து விட்டதை அடுத்து சவூதி தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டு விலை மேலும் சரியும் என கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments