அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தது 100பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் - செங்கோட்டையன்
தமிழக அரசின் நீட் பயிற்சி வகுப்பு மூலம், இந்த ஆண்டு குறைந்தது அரசுப் பள்ளி மாணவர்கள்100 மாணவர்களாவது அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளர்.
தனியார் பள்ளியின் தரம் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை எனவும், மாணவர்கள் பாடத்தை உள்வாங்கி கற்கும் சூழல் அரசு பள்ளிகளில் குறைந்துவருவதாகவும் உறுப்பினர் குற்றம்சாட்டினார்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வு முதற்கொண்டு அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக செங்கோட்டையன் பதிலளித்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு 7 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Comments