இந்தியர்களை மீட்பதில் சிக்கல் - வெளியுறவு அமைச்சர் வேதனை
ஈரான் நாட்டில் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமை கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
மக்களவையில் பேசிய அவர், ஈரான் நாடு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறினார்.
ஈரானின் பல மாகாணங்களில் சுமார் 6 ஆயிரம் இந்தியர்கள் வரை இருக்கக் கூடும் என்றார் அவர். இவர்களில் ஆயிரம் பேர் நீண்ட நாள் விசாவில் இருக்கும் தமிழகம், கேரளம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் என அவர் தெரிவித்தார்.
கொரானா தொற்றை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்த ஜெய்சங்கர் அவர்களை அழைத்து வர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் உறுதி அளித்தார்.
Comments