எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதி ஒதுக்கினால் மேல் நிலை குடிநீர் தொட்டி - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

0 934

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினால் திருவள்ளூரில் குடிநீர் மேல் நிலை தொட்டி அமைக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியில் குடிநீர் மேல் நிலை தொட்டி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை 29 ஆயிரத்து 348 குடிநீர் தொட்டிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர் நிதி ஒதுக்கினால், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தோப்பூரில் சேதம் அடைந்துள்ள குடிநீர்  தொட்டியை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments