பாத யாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை வெளுத்து வாங்கிய போலீசார்

0 1315

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அனுமதியின்றி பாத யாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை குண்டுகட்டாக கைது செய்த போலீசார், அவர்களை சரமாரியாக தாக்கினர்.

தண்டி யாத்திரையின் 90வது நினைவு தினத்தையொட்டி குளச்சல் முதல் இரணியல் வரை இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தடையை மீறி யாத்திரை மேற்கொண்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார், வாகனத்தில் வைத்தும், காவல் நிலையம் அழைத்து சென்றும் சரமாரியாக தாக்கினர்.

காவல்நிலைய வளாக கதவுகளும் அடைக்கப்பட்டு செய்தியாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments