கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா?

0 1143

சர்வதேச சந்தையில் கடந்த ஏப்ரல் முதல் 41 சதவிகித அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலன் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்காத வகையில் முக்கிய பெட்ரோல்-டீசல் நிறுவனங்கள் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடந்த 2015 டிசம்பரில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 2 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்த போது, பெட்ரோல் லிட்ர் 59 ரூபாய் 98 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 46 ரூபாய் 10 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

கொரானா வைரஸ் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை இப்போது பேரலுக்கு 2 ஆயிரத்து 552 ரூபாயாக குறைந்துள்ள நிலையில் அன்னியச் செலாவணி விகிதம், டீலர் கமிஷன், வரிகள் உள்பட டெல்லியில் பெட்ரோல் லிட்டர் சுமார் 65 ரூபாய்க்கும், டீசல் 55 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும்.

இதர நகரங்களில் இந்த விலையில் சிறிய ஏற்றமோ இறக்கமோ இருக்கும். ஆனால் இது வரை பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் முக்கிய 3 எண்ணெய் நிறுவனங்களும் இறங்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைமையினா யுபிஏ கூட்டணி அரசு, பெட்ரொல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிச்சயித்துக் கொள்ளலாம் என 2010 ல் அனுமதி அளித்தது. அதன்பின்னர் வந்த என்டிஏ கூட்டணி அரசு டீசல் விலை நிர்ணய உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன்களை மக்களுக்கு அளிக்கும் விதத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் ஒன்றுக்கு 35 புள்ளி 8 டாலராக குறைந்தது. கடும் போட்டி காரணமாக தனது உற்பத்தியை குறைக்கப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், மற்றோர் பெரிய உற்பத்தியாளரான சவூதி அரேபியா அடுத்த மாதம் பேரலுக்கு ஆறு முதல் ஏட்டு டாலர் வரை விலையை குறைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

யு.ஏ.இ-ம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் போட்டி தீவிரமாகி, கச்சா எண்ணெய் விலை மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதாவது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதற்கு ஏற்றவாறு குறைக்குமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments