சென்னை விமான நிலையத்துக்கு வந்த இளைஞருக்கு கொரானா அறிகுறி?

0 12196

அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த இளைஞருக்கு கொரானா அறிகுறிகள் காணப்பட்டதால், அவரை மருத்துவக் குழுவினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்தாலியில் இருந்து கடந்த 4ம் தேதி டெல்லி திரும்பிய அந்தமானை சேர்ந்த அந்த நபர், அங்கிருந்து சென்னை வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

தற்போது போர்ட் பிளேயர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது, பரிசோதனையில் உடல்நலக்குறைவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 27 வயதான அந்த இளைஞர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments