அண்ணா பல்கலைகழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தா... கே.பி.அன்பழகன் பதில்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றவோ, இரண்டாக பிரிக்கவோ மத்திய அரசுக்கு தாரை வார்க்கவோ தமிழக அரசுக்கு எண்ணம் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனைக் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவது தொடர்பாக 5 அமைச்சர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக காலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுத் தர முடியாது என்று தெரிவித்தார்.
உரிமைகளை விட்டுத் தந்தால் தான் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்றால், அப்படி ஒரு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்றும் கூறினார்.
Comments