The Da vinci code திரைப்பட கதாநாயகன் டாம் ஹாங்க்ஸுக்கு கொரானா

0 1632

தி டாவின்சி கோட் (the Da vinci code) திரைப்பட கதாநாயகன் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா வில்சன் ஆகியோர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, ஹாலிவுட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேஸ்ட் அவே, தி டாவின்சி கோட், டெர்மினல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ள அமெரிக்க நடிகரான அவர் ஆஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் சென்று அண்மையில் திரும்பியிருந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து இருவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தனிமையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரானா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, பிரிட்டன் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா உள்ளிட்ட பயணங்கள் மேற்கொள்வது வெள்ளி இரவு முதல் தடை செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments