IPL போட்டி : BCCI - க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஐ.பி.எல். போட்டிகளின் போது கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பி.சி.சி.ஐ.யும், அணி நிர்வாகங்களும் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 29-ஆம் தேதி முதல் மே 24 வரை நடைபெறவுள்ள ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியையும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் பார்வையிடுவார்கள் என்றும் கூட்டத்தில் யாருக்காவது கொரானா பாதிப்பு இருந்தால், எளிதாக பரவி விடும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. விசாரணையின் போது ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைப்பதா? ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா? என பதிலளிக்க பி.சி.சி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments