அமேசான் காடுகள் 50 ஆண்டுகளில் நிலை குலைந்து வறண்டு விடும் என எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால் அமேசான் மழைக்காடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் முற்றிலும் நிலைகுலைந்து வறண்டுவிடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
புவி வெப்பமடைதல், அதீத கோடை வெயிலால் கடந்த ஆண்டு அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் பல லட்சம் ஏக்கரிலான வனங்கள் எரிந்து நாசமாயின. ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்தன.
இவற்றிற்கு உடனடி தீர்வு காணாவிடில் உலகின் மிகப்பெரிய இந்த பல்லுயிர் மழைக்காடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா.வின் காலநிலை அறிவியல் ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாசு மற்றும் அமிலமயாக்கலை கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய கரீபியன் பவளப்பாறைகள் 15 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
Comments