எஸ் வங்கி வழங்கியதில் ரூ. 20,000 கோடியை வாராக்கடனாக அறிவித்த ராணா கபூர்

0 13868

எஸ் வங்கியில் இருந்து வழங்கிய கடனில் இருபதாயிரம் கோடி ரூபாயை வாராக்கடன்கள் என அறிவித்து ராணா கபூர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டிஎச்எப்எல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் காவல் நேற்று முடிந்தது. இதனால் பண மோசடிக் குற்றங்களை விசாரிக்கும் மும்பை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது, எஸ் வங்கி வழங்கிய 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனில், 78 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாயை வாராக்கடன் என அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த 78 நிறுவனங்களுக்கும் ராணா குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ராணாவை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments