ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரின் பதவி விலகல் ஏற்கப்படுமா? 

0 844

மத்தியப் பிரதேசத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்தம் 22 பேரில் 21 பேரின் பதவி விலகலைப் பேரவைத் தலைவர் நிராகரிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர்கள் 6 பேர் உட்பட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பேரவைத் தலைவர் பிரஜாபதியிடமும், ஆளுநர் லால்ஜி தாண்டனிடமும் பதவி விலகல் கடிதங்களை அளித்துள்ளனர்.

இந்தக் கடிதங்களின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் பேரவைத் தலைவரிடம் உள்ளது. 22 பேரின் பதவி விலகலை அவர் ஏற்றுக்கொண்டாலே சட்டப்பேரவையில் காங்கிரசின் வலு 92ஆகக் குறைந்துவிடும். பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளதால் அது பெரும்பான்மை பெற்றுவிடும்.

இந்நிலையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 22 பேரில் ஒருவர் மட்டுமே லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், மற்ற 21 பேரும் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அசெம்பிளி எனக் குறிப்பிட்டுக் கடிதம் கொடுத்துள்ள 21 பேரின் பதவி விலகலை நிராகரிக்க வேண்டும் எனப் பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளவர்களில் 19 பேர் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி அருகே குர்கானில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments