மக்களிடம் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன் -ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று நான் கடந்த வாரம் கூறியிருந்தேன்
என்னுடன் பேசிய விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் வெளியிடவில்லை
மா.செ சந்திப்பு குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செய்தியாளர் சந்திப்பு
என்னுடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற உள்ளேன்
அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்
1995 முதல் அரசியலுக்கு வர உள்ளதாக நான் ஒரு போதும் கூறியது இல்லை
அரசியல் வருகை குறித்து நான் முதன்முறையாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படையாக பேசினேன்
ஒருவேளை அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று 1996 முதல் யோசித்துக் கொண்டிருந்தேன்
2016-2017களில் தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன்
அரசியலுக்கு வர உள்ளதை அறிவித்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினேன்
சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்
திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தலா 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் உள்ளன
தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை
தேர்தல் முடிந்த பிறகு ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை இல்லை
ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும்கட்சி பிரமுகர்கள் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது
சிலர் கட்சிப் பதவிகளை தொழிலாகவே செய்கிறார்கள், அவர்களுக்கு வேறு வேலையே இல்லை
நான் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிக்கு புதிய பதவி, தேர்தல் முடிந்த பிறகு அந்த பதவிகள் தேவையில்லை
நான் ஆரம்பிக்கும் கட்சியில் தேவையான அளவிற்கு மட்டுமே நிர்வாகிகளை வைத்துக் கொள்ளப்போகிறேன்
சட்டப்பேரவையில் வயதானவர்கள் தான் அதிக எம்எல்ஏக்களாக உள்ளனர்
50, 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே எம்எல்ஏக்களாக உள்ளனர்
அரசியல் கட்சி வாரிசுகளால் தான் குறைந்த வயதில் எம்எல்ஏக்களாகின்றனர்
எனது கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்எல்ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும்
வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் அவர்களுக்கு 30 முதல் 35 சதவீத எம்எல்ஏ சீட்டுகள்
ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகளை அரசியலுக்கு அழைத்து வர உள்ளேன்
இளைஞர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு செல்வது புது மின்சாரம் பாய்ச்சுவது போல் இருக்கும்
இளைஞர்கள், திறமையானவர்கள் சட்டப்பேரவைக்கு செல்ல நான் ஒரு பாலமாக இருப்பேன்
தேசிய கட்சிகளை தவிர மாநில கட்சிகளில் ஒரே நபர் கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளனர்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு
கட்சித் தலைமையில் இருப்பவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கண்காணிக்க வேண்டும்
கட்சித் தலைமை கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை
முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை
1996ல் பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை
இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும்
ஆட்சித் தலைமை சரியாக இல்லை என்றால் கட்சித் தலைமை தூக்கி எறிய வேண்டும்
ஆட்சியில் இருப்பவர்களை கட்சித் தலைமை உள்ளிட்டவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைத்தேன்
கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது என்று நான் கூறுவதை பலர் ஏற்கவில்லை
முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறினர்
நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறினர்
நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை
முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று நான் 2017ம் ஆண்டே கூறியுள்ளேன்
2017ம் ஆண்டே முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை இல்லை என்று கூறியுள்ளேன்
மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும், நல்ல அரசியல் தலைவர் வர வேண்டும் என்று நினைக்கிறேன்
பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை
பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தலைவர்கள் தான் தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தனர்
தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் - உண்மையான வியூகம்
மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை
ஆளுமைமிக்க தவைரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும்
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை, முழு கஜானாவுடன் இருப்பவர்களை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும்
அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது
திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்தனர்
அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர்
2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்
தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் நான் அரசியலுக்கு வந்து என்ன பலன்?
நான் அரசியலுக்கு வரவில்லை என்று கிண்டல் செய்வார்கள், விமர்சிப்பார்கள், வேறு என்ன செய்ய முடியும்?
இப்போதே 71 வயதாகிவிட்டது, அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வருகிறேன் என்று எப்படி செயல்பட முடியும்?
என்னுடைய கட்சி நிர்வாகிகள் நான் கூறியதை ஏற்று மக்களை சந்திக்க வேண்டும்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும்
மக்களிடம் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன்
Comments