ஒற்றை வாழைப்பழத்திற்காக மோதிக் கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்

0 7142

தாய்லாந்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் ஒற்றை வாழப்பழத்திற்காக சாலையில் மொத்தமாக மோதிக் கொண்டன.

மத்திய தாய்லாந்தில் உள்ள லோப்புரி என்ற இடத்தின் புறநகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. தனித்தனியாக குழுவாக இயங்கி வரும் இந்தக் குரங்குகள் உணவுக்காக அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் லோப்புரி ஊருக்குள் வந்த குரங்குக் கூட்டத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் கிடைத்தது. அவ்வளவுதான்..... ஒற்றைப் பழத்தை யார் உண்பது என்பதில் போட்டி ஏற்பட்டு இறுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சாலையில் இறங்கி கடுமையாக மோதிக் கொண்டன.

மொத்தக் குரங்குக் கூட்டமும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் வாழைப்பழத்தை ஒருவர் மாறி ஒருவர் பறித்துக் கொண்டே குரங்குகள் நகரின் மறுபுறத்திற்குச் சென்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments