திருப்பதி,சபரிமலையை தொடர்ந்து பழனியிலும் பக்தர்களுக்கு வேண்டுகோள்
கொரானா வைரஸ் பரவலின் எதிரொலியாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள், மலையடிவாரத்தில் ஆங்காங்கே உள்ள மருத்துவ மையங்களை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments