H-1B விசா கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக வருவோருக்கு வழங்கப்படும் H 1B விசாக்கள் குறித்து டிரம்ப் அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
ஆண்டுதோறும் அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப அறிவு கொண்ட 85 ஆயிரம் பேருக்கு பணி நிமித்தமாக வருவதற்கு விசா வழங்குகிறது. அமெரிக்காவின் ஐடி நிறுவனங்கள் குறைவான ஊதியத்துடனும் மிகுந்த ஆற்றலுடனும் வரும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை பணியமர்த்துகின்றன.வெளிநாட்டவரை நியமனம் செய்வதற்கு அண்மையில் டிரம்ப் அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கர்களுக்கே பணியில் முன்னுரிமை என்ற முழக்கத்தை டிரம்ப் அரசு முன்வைத்தது. இதற்கென நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மெமோக்களை ரத்து செய்து வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.
Comments