IND vs SA: முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

0 4377

இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்க அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.

டூ பிளசிஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் நல்ல பார்மில் உள்ளனர். பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments