எபிடெமிக்கிலிருந்து பாண்டமிக்காக மாறிய கொரோனா வைரஸ்

0 11007

கொரோனாவை பாண்டமிக் எனப்படும் உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாண்டமிக் என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொரோனா 6 ஆயிரம் பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பாண்டமிக் வகையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக வைரஸ் பரவுதலை எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

இதில் எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவக் கூடிய வைரஸ் வகைகளாகும். அம்மை மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் இதில் அடங்கும். இரண்டாவதாக குறிப்பிடப்படும் எபிடெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளாகும். இந்த வகை வைரஸ்கள் மழைக்காலத்தில் அதிகம் தோன்றும். அப்போதுதான் அதிகமானோருக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உபாதைகள் தோன்றும். குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இந்த கிருமிகள் அழிந்து விடும் அல்லது சென்று விடும்.

தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ள பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் தன்மை கொண்டவை. இந்த வகை வைரஸ்களால் மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது அடுத்தவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. தற்போது பீதியைக் கிளப்பி வரும் கொரோனா பாண்டமிக் வகை என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தற்போது எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே போதுமான நிலையில் இருந்தாலும், பொதுமக்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments