இந்தியாவில் பரவும் கொரோனா பீதி..!

0 2441

கொரோனாவால் இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல் மரணம் நிகழ்ந்திருப்பதாகவும் கேரள பெண் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தி உலகில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 60 முதல் 70 வரை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதியில் இருந்து இந்தியா திரும்பிய கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற 76 வயதான முதியவர் உயிரிழந்தார். கர்நாடகா திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து சிகிச்சைபெற்று வந்தார்.

இதே போன்று கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது மூதாட்டியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதன் காரணமாக வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கொரோனா பாதிப்பால் விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டும் முகக் கவசம் அணிந்து வருகின்றனர். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் போன்ற முக்கிய நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதே போன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள திரையரங்குகள் கொரோனா பீதி காரணமாக மூடப்பட்டுள்ளன.

இதனிடையே ஏர் இந்தியா இத்தாலி, கொரியா, ஆகிய நாடுகளுக்கு மார்ச் 14 முதல் வரும் 28ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments