மிஷ்கினிடம் மற்ற தயாரிப்பாளர்கள் இரையாகிவிடக்கூடாது - விஷால் !
வெளிநாடுகளில் கதை எழுதுவதற்காக 35 லட்ச ரூபாய் உள்ளிட்ட 13 கோடி ரூபாயை செலவு செய்த நிலையில் துப்பறிவாளன்- 2ஐ இயக்கிவந்த இயக்குநர் படத்திலிருந்து விலகியதாக நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துப்பறிவாளன் -2 படத்தை இயக்கிவந்த மிஷ்கின், பாதியிலேயே அதிலிருந்து விலகினார். ரீமேக் உரிமை உள்ளிட்டவை குறித்து மிஷ்கின் விதித்த சில நிபந்தனைகளை விஷால் ஏற்காததே இதற்கான காரணம் என கூறப்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஷால், துப்பறிவாளன் - 2 படத்தை இயக்கியவர், முறையாக திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தாமல், தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர்,
படத்தைவிட்டு விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகையவர்களிடம் மற்ற தயாரிப்பாளர்கள் இரையாகிவிடக்கூடாது எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.
Comments