கொரானா பீதி - மழை அச்சம் : கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை

0 1713

கொரானா பீதி மற்றும் மழை காரணமாக, தர்மசாலாவில் நாளை நடைபெறும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பகல் 1.30 மணிக்கு துவங்கும் முதல், ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவுக்கு , இரு அணி வீரர்களும் வந்து சேர்ந்து விட்டனர்.

22 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 16 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளதாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

15 ம்தேதி, லக்னோவில், 2 - வது ஒரு நாள் போட்டியும், 18 ம் தேதி, கொல்கத்தாவில்,3 -வது இறுதி ஒரு நாள் போட்டியும் நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments