கச்சா எண்ணெய் வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகம்
கொரானா தொற்றால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரானா தாக்குதலை தொடர்ந்து சீன பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளது. அத்துடன் சீனாவில் ஏற்கனவே இறக்குமதி செய்த கச்சா எண்ணெயும், திரவ இயற்கை எரிவாயுவும் பெருமளவு இருப்பு உள்ளதால், புதிய இறக்குமதிகளை செய்ய முடியாத நிலையில் அது உள்ளது.
இது உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விலை குறைந்ததன் எதிரொலியாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
இந்த விலை குறைவு உள்நாட்டு பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மத்திய அரசின் நிதி நிலைமையை மேம்படுத்த அது உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments