பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழக்க காரணமானவர்களை கைது செய்யக் கோரி மக்கள் சாலைமறியல்

0 1599

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழக்க காரணமானவர்களை கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கந்திலியை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ரெயின்போ என்ற தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்த தேவதர்ஷினி என்ற சிறுமி செவ்வாயன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் தாக்கப்பட்டதால் மாணவி உயிரிழந்திருக்கக் கூடும் என குற்றம்சாட்டி, உறவினர்களும், மக்களும் திருப்பத்தூர் - பெங்களூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் மீது குற்றம் இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments