கொழுக்குமலை எஸ்டேட் தொழிலாளர்களை தாக்கிய சுற்றுலா கார் ஓட்டுநர்கள்

0 1850

தேனி மாவட்டம் குரங்கணியை அடுத்த கொழுக்குமலையில் எஸ்டேட் தொழிலாளர்களை சுற்றுலா கார் ஓட்டுநர்கள் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையில் கொழுக்கு மலை உள்ளது. கேரள மாநிலம் சூரியநெல்லி நகரில் இருந்து சுற்றுலா கார் ஓட்டுநர்கள் ஏராளமான சுற்றுலா பயணிகளை கொழுக்குமலைப் பகுதியில் உள்ள சிங்கம்பாறை என்ற இடம் வரை அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.

அது ஆபத்தான பகுதி என்றும் அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது குறித்து கேள்வி எழுப்பிய தங்களை கார் ஓட்டுநர்கள் தாக்கியதாகவும் கொழுக்குமலை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments