கொரானா பீதி : கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி
கொரானா மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக கறிக்கோழி , முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, விலை சரிந்துள்ளது.
சென்னையில் 10 நாட்களுக்கு முன்பு வரை, உயிருள்ள கோழி கிலோ 96 ரூபாய்க்கும், உரித்த கோழி, கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. படிப் படியாக விலை வீழ்ச்சி அடைந்து, உயிருள்ள கோழி, 40 ரூபாய் என்றும், உரித்த கோழி, 60 ரூபாய் என்றும் நிர்ணயிக் கப்பட்டு உள்ளது.
சென்னையில் கறிக்கோழி கொள்முதல், நாளொன்றுக்கு 5 லட்சத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனிடையே, பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை, கொரானா பீதி காரணமாக, கோழி பிரியாணியின் விற்பனையும் சரிந்துள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Comments