தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

0 2660

தென்மாவட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை இயல்பான வெப்பநிலையே காணப்படும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments