கொரானா பீதி - பலாக்காய்க்கு ஏறிய மவுசு
கொரானா பீதியை தொடர்ந்து மட்டன், சிக்கன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவற்றுக்கு மாற்றாக பலாக்காயை மக்கள் வாங்கத் துவங்கி உள்ளதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் ருசி சிக்கனைப் போல இருப்பதால் அதை உத்தரபிரதேச மக்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பலாக்காயின் விலை 120 ரூபாயாக உயர்ந்து விட்டது. கோழிக்கறியால் கொரானா பரவும் என்ற வதந்தி தீயாய் பரவியதை அடுத்து சிக்கன் விற்பனை மளமளவென்று சரிந்து கிலோ 80 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது.
Comments