இந்திய சந்தை மதிப்பில் 2ஆம் இடத்திற்கு போன ரிலையன்ஸ்
இந்திய சந்தை மதிப்பில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ்...
பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவு காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா கன்சல்டன்சி முதலிடத்தை பிடித்தது. கடந்த 2 நாட்களாக, பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவால், ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் குறைந்தது. இதனால், இந்தியாவில் அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவானது. இரு தினங்களுக்கு முன், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்குகள் விலை, 6.88 கோடியாக குறைந்த நிலையில், ஒரு பங்கு விலை, 1,972 ரூபாய் ஆனது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.40 லட்சம் கோடி ரூபாய் ஆனது. அதேவ் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து, ஒரு பங்கின் விலை, 1,113.15 ரூபாயாக சரிந்தது. தற்போது, இந்திய சந்தைமதிப்பில் டி.சி.எஸ் 7.06லட்சம் கோடியை கொண்டு முதலிடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் 6.88 கோடியை கொண்டு இரண்டாவது இடத்திலும், எச்டிஎப்சி 6.02 லட்சம் கோடியை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
Comments