கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர்
இங்கிலாந்து சுகாதாரதுறை அமைச்சர் “நாடின் டோரிஸ்” கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா இதுவரை பல்வேறு உலக நாடுகளில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான நாடின் டோரிசுக்கு கொரோனா நோய் தாக்கி உள்ளது கண்டுபிடிக்கப்படுள்ளது.
இவர் கடந்த வாரம் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரில் நடந்த நிகழ்சியில் பங்கு பெற்றிருந்தார். இதனால் இங்கிலாந்தில் கொரோனோவின் தாக்கம் அதிகமாகி உள்ளதா என அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் சமூகபாதுகாப்புதுறை நிர்வாகிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.
நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடரும் நடக்க உள்ளதால். உறுப்பினர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பாராளுமன்றத்தை மூடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் ஆறு பேர் இறந்துள்ள நிலையில் அதனை தடுக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் 46 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments