துபாயில் இருந்து கடையநல்லூர் வந்த இளைஞருக்கு காய்ச்சல், இருமல்

0 1514

தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு துபாயில் இருந்த வந்த இளைஞருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததையடுத்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருக்கும் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சொக்கம்பட்டியை சேர்ந்த 27 வயதான இளைஞர், துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 7ம் தேதி துபாயில் இருந்து வந்த அவருக்கு தொடர் காய்ச்சல், இருமல் இருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு காய்ச்சல் குறையாததால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு, ரத்த மாதிரி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments