அமெரிக்காவில் ஆயிரத்தை நெருங்கும் கொரானா ..முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..
அமெரிக்காவில் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலையில், மக்கள் திரளாக கூடுவதற்கு தடை விதித்தும்,பள்ளிகளை மூடியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று வேகமாக இருப்பதை அடுத்து மஸாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் சார்லி பேக்கர் (Charlie Baker ) அறிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் 92 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாஷிங்டனைச் சேர்ந்த 24 பேர்,ஃபுளோரிடாவில் (Florida) 2 பேர், கலிபோர்னியாவில் 3 பேர், நியூ ஜெர்ஸி, சவுத் டகோட்டாவில்( South Dakota) தலா ஒருவர் என அமெரிக்காவில் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கொரானா தொற்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்சாரக் கூட்டங்களும் முடங்கியுள்ளன. நியூ யார்க்கில் தொற்று அதிகமாக உள்ள நியூ ரோச்சலில் (New Rochelle)ஒரு மைல் சுற்றளவை கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கவுமோ (Andrew Cuomo)அறிவித்துள்ளார். இதை அடுத்து அங்கு வசிக்கும் சுமார் 80 ஆயிரம் மக்களின் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments