இந்திய மூலதன சந்தைகளில் அந்நிய நிறுவனங்கள் பணத்தை திரும்பபெற்றன
இந்திய மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள 13,157 கோடி ரூபாயை அந்நிய நிதி நிறுவனங்கள் திரும்பபெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், அமெரிக்க பங்கு சந்தைகள் வீழ்ச்சியை கண்டுள்ளதன் காரணமாகவும், உலக நாடுகளிலின் பங்கு சந்தைகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவில் மூதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மத்தியும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என அந்நாட்டு அரசு முன்னரே உணர்த்தன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை 0.5% குறைத்தது. இந்த நிலையில், இந்தியாவில் தற்போது யெஸ் வங்கியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அந்நிய முதலீட்டாளர்கள் மூலதன சந்தைகளிலிருந்து இந்த மாதத்தில் மட்டும் தற்போது வரை 13,157 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. அந்த வகையில், மார்ச் 2 முதல் 6ஆம் தேதி வரை பங்குகளிலிருந்து 8,997 கோடி ரூபாயையும், கடன் சந்தைகளிலிருந்து 4159 கோடியையும் திரும்ப பெற்றுகொண்டன.
Comments